×

சையது மோடி சர்வதேச பேட்மின்டன் பி.வி.சிந்து சாம்பியன்

லக்னோ: சையது மோடி சர்வதேச பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோட் உடன் நேற்று மோதிய சிந்து அதிரடியாக விளையாடி 21-13, 21-16 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இப்போட்டி 35 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. சையது மோடி தொடரில் சிந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2017ல் அவர் இத்தொடரில் பட்டம் வென்றிருந்தார்.இஷான் – தனிஷா அசத்தல்: கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் இஷான் பட்னாகர் – தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-16, 21-12 என்ற நேர் செட்களில் மற்றொரு இந்திய ஜோடியான ஹேம நாகேந்திர பாபு – ஸ்ரீவேத்யா குரஸடா ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. உலக டூர் எக்ஸ்டி அந்தஸ்து தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் சாம்பியன் பட்டம் இது….

The post சையது மோடி சர்வதேச பேட்மின்டன் பி.வி.சிந்து சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Sayathu Modi ,Lucknow ,Sinhu ,Dinakaran ,
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...